Saturday, 28 January 2012

நானும் கடவுள்





பிள்ளைகளின் மரணம்
நடுரோட்டில் இரத்ததால்
குதறப்படும் குடும்பங்கள்
உலகம் கண்டுகளித்த
இனப்படுகொலைகள்
கொடூரர்களின் ஆட்சி
முன்ஜென்ம பாவங்கள்
ஏதுமறியா அகால மரணங்கள்
போராளிகளின் வீழ்ச்சி
விவசாயிகளின் கண்ணீர்
ஏழைகளின் வயிற்றடுப்பு
பணம் பணமென
பேயாய் அலையும் பதர்கள்
தீயின் நாக்குக்கு
தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்)
பிஞ்சுகளை சிதறடிக்கும்
குண்டுகள்
அப்பாவிகளை நோக்கியே
நீளும் ஆயுதங்கள்
காமத்திற்கு இரையாகும்
பால்முகங்கள்
கழுத்தறுக்கப்பட்ட கனவுகள்
இவற்றைக் கண்டு
நாணாதவன் கடவுளெனில்
நானும் கடவுள்...

13 comments:

  1. எல்லோரும் கடவுள்தான்..

    ReplyDelete
  2. நல்ல கவிதை.அதைவிட மனதை மெளனத்தில் ஆழ்த்திய படம்.

    ReplyDelete
  3. நாணமில்லாதவன் கடவுள் என்றால் நாம் கொஞ்சம் கடவுள் இல்லைதான்..

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க சார்... நமக்காவது கொஞ்சம் கோபம் இருக்கு...

      Delete
  4. வணக்கம் நண்பா,
    அக்கிரமத்தினைக் கண்டு பொங்காத கடவுளுக்கும், மனிதனுக்கும் குணத்தளவிலும்,
    உருவத்திலும் வேறுபாடு இல்லை என்பதனை நல்ல கவிதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  5. மனதைப் பிசையும் படமும் கவிதையும்............

    ReplyDelete
  6. மனதை கசிய வைக்கிறது படம். உணர்வுகளைக் கொல்கிறது கவிதை. நிஜம் வலிமையானது. வலியில்தான் வழிகள் திறக்கின்றன.

    ReplyDelete
  7. மாறுபட்ட சிந்தனை
    அருமையான சொற்பிரயோகம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமை என சாதாரணமாக சொல்லமுடியவில்லை

    ReplyDelete