Saturday, 14 January 2012

நண்பன் - ALL IS WELL

தமிழ் திரைப்பட வரலாற்றுல இதுவரை விஜய் அடிச்ச க்ளைமாக்ஸ் தான் வந்திருக்கு ஆனா அடி வாங்குற கிளைமாக்ஸோட வந்திருக்கிற முதல் படம் இதுதான்னு நினைக்கிறேன்.

நான் 3 idiots பார்க்கல அதனால நண்பன மட்டும் விமர்சனம் பண்றேன்.இந்த படத்த விமர்சனம் பண்ணனும்னா குறைஞ்சபட்சம் 3 தடவயாவது பாக்கணும். அவ்வளவு அழகான,நேர்த்தியான விசயங்களை படம் முழுக்க தெளிச்சிருக்காரு ஷங்கர்.”இது காலேஜ் பிரஷர் குக்கர் இல்ல”னு சொல்ற நாயகனுக்கும், "லைஃப் இஸ்  எ ரேஸ், நீ ஓடலீனா தோத்துருவ"னு சொல்ற வாத்தியாருக்கும், “இந்த சிஸ்டம வெச்சே படிச்சு உங்கள விட பெரிய ஆள் ஆகிக் காட்டறேண்டா” என சொல்லும் டப்பா உருட்டி மாணவனுக்கும் இடையே நடக்கும் வாழ்வியல்,கல்வியியல் ரீதியிலான மோதலும்,கோபமும்,நட்பும்,நன்றியும் தான் நண்பன்.படத்தோட மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களின் அமைப்பு தான் அதனால ஒவ்வொரு கதாபாத்திரமாவே பார்ப்போம்.இலியானா- யாருப்பா அது எட்டாங்க் கிளாஸ் ல அசெம்ப்ளி லைன்ல கடைசில நிக்கற பொண்ண எல்லாம் ஹீரோயின் ஆக்கினது? மொசு மொசுனு இட்லி சாப்பிட்ற தமிழனுக்கு இந்த நூடுல்ஸ் சரிப்பட்டு வருமான்னு தெரில.பொண்ணுக்கு பெருசா ஒண்ணும் வாய்ப்பு இல்ல.பாட்டுல கூட பக்கத்துல ஆட்ற ஃபிகருங்கள தான் கண்ணு பாக்குது.தண்ணி அடிச்சுட்டு பேசுற சீன்ல மட்டும் அப்ளாஸ் வாங்குறாங்கோ.எனக்கொரு சந்தேகம் தெலுங்கல ஓடி முடிஞ்ச வண்டிங்கள(அனுஷ்கா,ஜெனிலியா,காஜல் அகர்வால்,இலியானா) எல்லாம் பெரிய ஃபிகர்ஸ்னு சொல்லி தமிழுக்கு கொண்டு வரீங்களே டைரடக்கர்ஸ் இவங்க எல்லாரும் தமிழ்ல ஆரம்ப காலத்துலயே இருந்தவங்க தான அப்ப வுட்டுட்டு இப்ப ஓல்டு பீஸ் ஆனப்புறம் 1 கோடி சம்பளம் குடுத்து கூட்டிட்டு வரீங்களே இதெல்லாம் அடுக்குமா? ஹீரோயின்ஸ எப்படி மெயிண்டெயின் பண்ணனும்னு தெலுங்கு படவுலக மக்கள பாத்து கத்துக்கங்கப்பா.ஸ்ரேயா,தமன்னானு எங்கள கொடுமைபடுத்தினதுக்கு இனிமேலாவது பிராயசித்தம் பண்ணுங்க.ஹன்ஸிகா பாப்பாவயாவது ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணுங்க.ஷ்ரீகாந்த்- இதுவரைக்கும் வந்த படத்துலயே இதுல தான் ஸ்மார்ட்டா இருக்கார்.படிக்க முடியாம வருத்தப்படும் போதும்,நண்பன் முதலாவதா வரும் போது கடுப்பாவதும்,கேம்பஸ் இண்டர்வியூ போகாம தந்தையிடம் எப்படி தன் ஆசையை புரிய வைப்பதென தெரியாமல் மருகுவதிலும் சரி நல்ல பாவனைகளுடன் பண்ணிருக்கார்.அதுவும் ஜெயா அக்காவ கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்களோனு முழிக்கற சமயம் டாப்பு.

ஜீவா- எங்க எத செய்யணுமோ அங்க அத செஞ்சிருக்கார்.நல்ல முதிர்ச்சி.

சத்யன் - ஜட்டி பெல்ட்ல இருந்து டிக்‌ஷ்னரி எடுத்து தமிழ் பேசறதுல ஆரம்பிக்கற இவரோட அலப்பறை ‘நட்புல இதெல்லாம் சகஜமப்பா’னு சரண்டர்  ஆகற வரை வெளுத்து வாங்கறார்.டப்பா அடிச்சே பெரிய ஆள் ஆயிடலாம்னு சுத்திட்டிருக்குற சாம்பார் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம் “I didn't do it.senthiiiil”, "sir they are still writing","வாங்கடா தோத்தாங்கோளிகளா", ”நட்புல இதெல்லாம் சகஜமப்பா”,உச்சகட்டமாக மேடைப் பேச்சு என வசன பாவத்துல (அதாங்க மாடுலேஷன்) பிச்சு எடுக்குறார்.அமெரிக்க வீடு,வேலை என பீத்திக் கொள்வது முதல் ஜீவாவிடம் பேண்ட் என்னுது என அவிழ்க்க போராடுவது  வரை இவர விட்டா இந்த கதாபாத்திரத்துக்கு சத்தியமா வேற யாரும் பொருந்த முடியாது.சத்யராஜ் - நீண்ட இடைவெளிக்கப்புறம் சத்யராஜுக்கு சரியான வேட்டை.நாக்கு துறுத்தி வசனம் பேசும் பாங்கு,தன்னுடைய கொள்கையை விட்டுக் குடுக்காத அடம்,கண்டிப்பான வாத்தியார்னு பக்காவா செஞ்சுரி அடிச்சிருக்கார்.ரொம்ப அலட்டிக்காம மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது,விஜயிடம் மூக்குடைபடும்போது பொருமுவது, மகளோட பிரசவத்தப்ப பதறுவது, விஜயிடம் தன்னுடைய தோல்வியை கண்டிப்பான ஆசிரியராகவே வெளிப்படுத்துவது என சத்யராஜ்னு நினைச்சா நினைவுக்கு உடனே வரக்கூடிய கதாபாத்திரமா இதுல முத்திரை பதிச்சிருக்கார்.

விஜய் - அமீர்கான் பாத்திரத்துல விஜயா?னு புருவம் சுருக்குன ஆளுங்களுக்கெல்லாம் பலமாவே பதில் சொல்லியிருக்கார். மலங்க மலங்க முழிச்சுட்டு முதலாமாண்டு மாணவனா ராகிங் நடக்கறப்ப விடுதிக்குள்ள வராரு விஜய்.சீனியர்களின் ராகிங்கு பயந்து ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கறாரு.பத்து எண்றதுக்குள்ள வெளிய வரணும்னு சீனியர் மிரட்டுறாரு.நமக்கு உடனே மனசுல என்ன தோணிச்சுனா தலைவர் பட்டாசான ஒரு பிண்ணனி இசையோட கதவை எட்டி உதைச்சு வந்து நிக்க போறாருனு தான் சத்தியமா தோணுச்சு.ஆனா படம் முடிச்சுட்டு வெளிய வர்றப்ப விஜய் ஒரு நெருங்கிய நண்பனா தோன்றுகிறார்.அது தான் அவரோட நடிப்பின் வெற்றி.இப்படி படத்தோட உயிரோட்டமாக விஜய பாத்து ரொம்ப நாள் ஆச்சு.ஒரே ஒரு விசயம் விஜய்க்கு உங்க விருப்பப்படி உருட்டுக்கட்டை,அருவா,துப்பாக்கினு நடிச்சாலும் இப்படி எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி படங்கள் கண்டிப்பா பண்ணுங்க.விஜயை எந்த உறுத்தலும் இல்லாம இரசிக்க முடிஞ்சது தான் மகிழ்ச்சி (நல்லவேளை சூர்யா நடிக்கல).

ஷங்கர்- அழகான படத்த நேர்த்தியா,அதன் இயல்பு கெடாம,சிறந்த பாத்திர தேர்வோட தந்ததுக்கு நன்றி.

எஸ்.ஜே.சூர்யா, அமெரிக்க மாப்பிள்ளை,அஷ்க லஷ்கா பாட்டுல ஷங்கர் தன்னைத் தானே ஓட்டிகிட்டது எல்லாம் வானவெடியில் சில பொறிகள்.

உறுத்தல்கள்:
1)  பஞ்சவன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில்னு தமிழ் பெயர்கள் வெச்சது மகிழ்ச்சி ஆனா ”பாரிவேந்தனா? யக் (yuck)”னு இலியானா சொல்றப்ப (அப்படி சொல்லக் கூடிய சைலன்சர்கள் உண்டுனு வைங்களேன்) பொடனில ஒரு போடு போட்ருந்தா சந்தோசபட்ருப்போமே.ஒரு வாட்டி தமிழர்கள் கிட்ட கெட்ட பேர் வாங்கினது போதாதா? (அலோ பாஸ்... நான் ஐ.ஜே.கே ஆள் இல்லப்பா சங்ககால தமிழ் பெயர்ங்கிறதால் கேட்டேன்.நான் அந்த பப்ளிசிட்டி கூட்டத்துல சேர்த்தி இல்ல)

2) ஆளாளுக்கு பேண்ட் அவுக்கறது நல்லாலீங்க பாஸ்.

3) சத்யனின் மேடை பேச்சுல டபுள் மீனிங்க தவிர்த்துட்டு நேரடியாவே பலான பலான டயலாக்ஸ விளக்கத்தோட எடுத்து விட்டதுக்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செஞ்சிருக்கலாம் (குடும்பத்தோட போனதால வந்த ஃபீலிங்).

நண்பன் - ALL IS WELL
4 comments:

 1. நண்பன் படம் குறித்த இதுகாறும் வந்த அனைத்து பதிவாளர்களின் விர்சனத்தையும் (அனேகமாக) படித்து முடித்து விட்டேன். ஆனால் சொல்லிவைத்தாற்போல் அனைவருமே இந்த படத்தில் வரும் ஒரு சில அருவருப்பான காட்சிகளைக் குறித்து விமர்சிக்க தவறி விட்டனர் அல்லது தவிர்த்துவிட்டனர். கற்பழிப்பது (கற்பிப்பது) குறித்து இத்தனை நீண்ட அங்கலாய்ப்பு அவசியமா? அதைப்போலவே கொங்கைகள் குறித்தும், குசுவாசம் குறித்தும் இத்தனை வியாக்கியானம் தேவையா? குழந்தைகளோடு, குறிப்பாக பெண்குழந்தைகளோடும் சகோதரிகளோடும் படம் பார்க்கும்போது உறுத்துறது. ஒரு நல்ல படத்தில் இது தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

  "ALL" ARE WELL

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க அனானி.நம்ம மூணாவது உறுத்தலும் அதேதான்.

   Delete
 2. //நல்லவேளை சூர்யா நடிக்கல..//

  எனக்கு தோனுனதும் அதேதான்..
  நேர்த்தியான விமர்சனம்...

  ஹிந்தி பார்த்திருந்தால் ஒப்பீடு செய்து இன்னும் ஒரு பத்தி தேறியிருக்கும்...
  நேரடியாக தமிழில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை...
  ஒவ்வொரு காட்சியையும் குறை நிறை ஒப்பீட்டோடுதான் பார்க்க நேர்ந்தது..
  தாரணி கையில் சிக்கியிருந்தால் சட்னிதான்..

  ReplyDelete