காமம் என்றால்
காதை பொத்தும் கனவான்களே...
சற்று பொத்திய காதை திறவுங்கள்
உயிரின் பிறப்பு
இயற்கையின் புதிப்பிப்பு
சேர்க்கையின்றி வாழுமோ உலகு?
ஆதி முதல்
ஆணும் பெண்ணும்
உன் சாத்திரங்கள் கண்டா
கூடினர்?
ஒழுக்கமென்று பசப்பி
உணர்வை கொல்ல
நீ யார்?
கற்பு நெறியும்
ஒழுக்க விதியும்
உனக்கான இரையை
உறுதியாய் பற்றிக்கொள்ளத் தானே?
காதலென்னும் வெற்று மொழி
அதற்கு புனிதமென்னும் கோட்டை...
கேடிலும் கேடு...
உணர்வு கொண்டு
கூடுதல் மட்டுமே இயற்கை...
காதல்
ஒழுக்கம்
கற்பை
உன் சாத்திரங்களோடு சேர்த்து
நெருப்பில் வீசு
உணர்வுக்கு தலைவணங்கும்
புதிய சமூகம் மலரட்டும்!!!
இப்படிக்கு
ஆதிமனிதன்.
இப்படி ஒரு கவிதை எனது...
நல்லவேளை
இதுவரை எதிலும் பிரசுரமாகவில்லை
எழுதிவைத்து 4 வருடங்கள் இருக்கும்
எரித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏனெனில்
நேற்றெனக்கு
திருமணமாகிவிட்டது...
இப்படிக்கு
குடும்பஸ்தன்...
அருமை அருமை
ReplyDeleteஇறுதி வரிகள் கவிதைக்கு புதிய் பரிமாணம்
கொடுத்துப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
உணர்வுக்கு தலைவணங்கும்
ReplyDeleteபுதிய சமூகம் மலரட்டும்!!!
மலருமா காத்திருக்கிறேன் அருமை
நன்றி அக்கா...
Deleteநன்று...
ReplyDeleteதொடர்புடைய இடுகை..
http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post_06.html
காமம் என்பது என்ன நோயா?
அருமை பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
கற்பை பற்றி பேசுபவர்கள் பலர் இருட்டில் உணர்வுக்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள் . யதார்த்தமான வரிகள்.
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteஅருமையான கருவெடுத்த கவிதை.கடைசிப் பந்தி உயிராய் நிற்கிறது.வாழ்த்துகள் !
ReplyDeleteநன்றி அக்கா...
Deleteunara vaikum varikal unmai varikal sir.....
Deletegood thought friend....
Delete