Saturday 21 January 2012

மூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

என் இனிய தமிழ் மக்களே நம்ம ஊர்ல இருந்து வெளிநாட்டுக்கு போக கடவுச்சீட்டு அதாங்க பாஸ்போர்ட்டு ரொம்ப ரொம்ப முக்கியம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அதுமில்லாம அது பல இடங்கள்ல ஒரு அடையாள சான்றா பயன்படுத்திக்கலாம்.அந்த பாஸ்போர்ட் எடுக்கறது பெரிய வேலை,ரொம்ப செலவாகும்,ரொம்ப நாளாகும்னு நினக்கறவங்களுக்கெல்லாம் 3 நாள்ல எப்படி பாஸ்போர்ட் எடுக்கறதுன்னு சொல்றதுதான் இந்த பதிவு.என்னது 3 மணிநேரத்துல ரெடி பண்ணிருவீங்களா? அலோ நான் ஒரிஜினல் பாஸ்போர்ட்ட பத்தி பேசறனுங்க...



1) முதல்ல பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் போடனும்ல அதுக்கு மிக எளிதான வழி இணைய வழில போட்றதுதான்.மருத்துவ அவசரநிலை,நெருக்கடியான நிலை தவிர மத்த நேரங்கள்ல நேரடி விண்ணப்பங்கள ஏத்துக்க மாட்டோம்னு இணையத்துல போட்டுருக்காங்க.விண்ணப்பிக்க முதல்ல www.passportindia.gov.in என்கிற இணையதளத்துக்குள்ள நுழைங்க.

2) ஃபேஸ்புக்குல அக்கவுண்ட் வெச்சிருக்குற மாதிரி இதிலயும் அக்கவுண்ட உருவாக்கனும்.பயனர் பெயர்(username),கடவுச்சீட்டு(password) எல்லாம் மறக்காம நினைவுல வெச்சிக்குங்க.

3) APPLY FOR A FRESH PASSPORT அப்படிங்கற ஒரு தேர்வு முதல் பக்கத்துல இருக்கும் அத தேர்ந்தெடுங்க.

4) விண்ணப்பத்த நிரப்பறக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய விசயம் நீங்க என்னென்ன சான்றிதழ்கள குடுக்க போறீங்களோ அதுல இருக்குற விவரங்களுக்கும் விண்ணப்பத்துல போட்ற விவரங்களுக்கும் முட்டல் மோதல் இல்லாம பாத்துக்கங்க.பெயரொட எழுத்துக்கள் கூட மாற கூடாதுங்க.ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கடவுச்சீட்டு அலுவலகம் இருக்கும் அத சரியா தேர்ந்தெடுங்க.

5) பல கட்டங்களைக் கொண்ட ஒரு விண்ணப்ப படிவம் வரும்.அத பொறுமையா நிரப்புங்க.முகவரிய தெரிவிக்கும் பொழுது சரியான முகவரிய போடுங்க.சின்ன வீடா? பெரிய வீடா?னு குழப்பத்துல தப்பு தப்பா அடிச்சறாதீங்க.

6) இந்த விவரத்த நிரப்புறதுல முக்கியமான விசயம் REFERENCE FOR ADDRESSனு கேட்டிருப்பாங்க அதுல உங்களுக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டுகாரங்களோட பெயர்,முகவரி,தொலைபேசி எண் குறிப்பிடனும்.கல்லூரி விடுதில தங்கிருக்குற மாணவர்கள் விடுதி முகவரிய தற்காலிக முகவரிங்கற இடத்துல குடுத்துட்டு REFERENCE கு உங்க லோக்கல் கார்டியன் பெயர குடுங்க.

7) வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்டிருப்பாங்க அதையும் குடுத்துட்டீங்கன்னா இனிதாக விண்ணப்பம் முழுமையா முடிஞ்சுடும்.நீங்க விண்ணப்பத்த பூர்த்தி செய்யறப்ப மின்சாரம் புஸ்ஸாச்சுன்னா கவலைபடாதீங்க நீங்க பாதில நிப்பாட்டினா கூட எப்ப வேணாலும் விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம.

8) அடுத்துதான் முக்கியமான விசயம்.விண்ணப்பத்த மட்டும் பூர்த்தி பண்ணிட்டா பாஸ்போர்ட்ட குடுத்துட மாட்டாங்கோ.நேர்முக விண்ணப்ப பரிசீலனை நடக்கும் (இண்டர்வியூ).அதுக்கு நாம ஒரு அப்பாயின்மெண்ட் நேரத்த தேர்ந்தெடுக்கனும்.விண்ணப்பம் பூர்த்தி ஆனப்புறம் உங்க அக்கவுண்ட திறந்து பாத்தா MANAGE MY APPOINMENTனு ஒரு தேர்வு இருக்கும் அதுல போயி உங்களுக்கான தேதியும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க போனீங்கன்னா உடனே கிடைச்சுடாது.இத்தனை தேதி சாயங்காலம் 6 மணிக்கு வாங்க அப்பதான் அப்பாயின்மெண்ட் தருவோம்னு இணையதளம் சொல்லும்.உதாரனத்துக்கு 30.1.2012,6 PM க்கு தான் அப்பாயின்மெண்ட் குடுப்போம்னு சொல்லுச்சுன்னு வெச்சிக்கங்க நீங்க 5.55 கே அக்கவுண்ட திறந்து வெச்சு உட்கார்ந்துக்கங்க.சரியா 6 மணிக்கு திறந்து உடனே அப்பாயின்மெண்ட்ட போட்டுடுங்க.ஒரு தேதி தான் இருக்கும் அதுல காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை நேரம் குடுத்திருப்பாங்க.உங்களுக்கு வசதியான நேரத்த உடனே தேர்ந்தெடுங்க ஏன்னா இதெல்லாம் தேர்வு செஞ்சு முடிக்கறக்கு உங்களுக்கு 5 நிமிஷம்தான் கிடைக்கும் அதுக்குள்ள அப்பாயின்மெண்ட் காலி ஆயிடும்.அதுக்கு மேல காலண்டர்ல நல்ல நேரம் பாத்துட்டு உட்காந்திருந்தா இன்னும் 3 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிடும்.

9) கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு போகறக்கு முன்னாடி நீங்க சமர்பிக்க போற சான்றிதழ்கள் (DATE OF BIRTH PROOF,ADDRESS PROOF,BONAFIDE IF STUDENT,IF THERE IS TEMPORARY ADDRESS PROOF FOR THE SAME) எல்லாத்துலயும் உங்க பேரோட ஸ்பெல்லிங்,முகவரி எல்லாம் சரியா இருக்கானு பாருங்க.சின்ன பிழை இருந்தாலும் தூக்கி கடாசிடுவாங்க.எதுக்கும் ஒவ்வொன்னுக்கும் 2 சான்றிதழ் எடுத்து வெச்சிக்குங்க.சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு பிரதி எடுத்து அதுல நீங்க கையெழுத்தும் போட்டு வெச்சிக்கனும்.வங்கி கணக்கு புத்தகம் மட்டும் பத்தாது பேங்க் ஸ்டேட்மெண்டும் அது கூட இருக்கனும்.10th அல்லது 12th மதிப்பெண் சான்றிதழ் முக்கியம்.

9) அப்பாயின்மெண்ட் கிடைச்சதும் உங்களுக்கு APPLICATION RECEIPT கிடைக்கும் அத பிரதி எடுத்து வெச்சிக்கங்க.அத காட்டினாதான் உள்ள விடுவாங்க வாட்ச்மேனுக்கு சம்திங் குடுத்தெல்லாம் உள்ள போக முடியாது.

10)  உங்களுக்கு அப்பாயின்மெண்ட் இருக்கற தேதிக்கு,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடியே போய் உட்காந்துக்கங்க.உங்க நேரத்துக்கு உங்கள உள்ள விடுவாங்க.

11) உள்ள போனதும் 4 அல்லது 5 கவுன்டர் இருக்கும் அதுல ஏதாவது ஒரு வரிசைல நில்லுங்க.அங்க இருக்குற ஒரு தம்பியோ இல்ல பாப்பாவோ (பாஸ்போர்ட் அலுவலகம் எல்லாம் இப்ப TCS கைல இருக்கு அதனால எல்லாரும் சின்ன பசங்களா தான் இருப்பாங்க) இருக்கும்.அவங்க கிட்ட உங்க APPOINMENT RECEIPT,சான்றிதழ்களோட அசல்,பிரதி எல்லாத்தையும் குடுங்க.அவரு அதுல நொல்ல,நொட்டையெல்லாம் பார்த்து எதெது சரிபட்டு வரும்னு பாத்துட்டு உள்ள போனா இந்தாளு பாஸ் பண்ணிடுவாருன்னு தோனிச்சுனா ஒரு டோக்கனும்,உங்க சான்றிதழ்கள ஒரு கோப்புல போட்டும் குடுப்பாங்க.அத பத்திரமா வெச்சிக்கங்க.காத்திருப்பு அறைக்குள்ள உட்காரச் சொல்லுவாங்க.அசல் சான்றிதழ் உங்க கைல குடுத்திருவாங்க அத அடுத்த கட்டங்கள்ல கேட்கும் போது மட்டும் குடுங்க.

12) இதுக்கப்புறம் நீங்க A,B,C என 3 இடத்துல நேர்முக பரிசிலனை நடத்துவாங்க.ஒவ்வொன்னையும் முடிச்சாதான் பாஸ்போர்ட்டு கிடைக்கும்.காத்திருப்பு அறைல கலர் கலரா TCS பொன்னுங்க இருப்பாங்க அவங்களையெல்லாம் பாக்காம அங்க இருக்குற டி.வி ய மட்டும் கன் மாதிரி பாக்கணும்.அதுல தான் டோக்கன் எண்கள் போடுவாங்க.உங்க எண் முதல்ல A கவுன்டர்ல வரும்.குடுகுடுனு ஓடிப்போய் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுன்டர்ல உட்கார்ந்துக்கங்க.அங்கயும் TCS பணியாளர் தான் இருப்பாங்க.அவங்ககிட்டயும் எல்லா சான்றிதழ்களையும் குடுங்க.உங்கள புகைப்படம் எடுப்பாங்க அதனால தலைய சீவிட்டு மூஞ்சிய துடைச்சிட்டு போய் உட்காருங்க.ரூ.1000 பணம் கேட்பாங்க அதயும் குடுங்க (தட்காலுக்கு ரூ.1500). உங்க விண்ணப்பத்த திறந்து அதுல எல்லா விவரங்களும் சரி பார்பாங்க.அதுல நீங்க கடலை போட்றக்காக எக்கச்சக்கமா பேசி மாட்டிக்காதீங்க.ஏன்னா ஏதாது சின்ன மாறுதல் இருந்தாலும் குடைஞ்செடுப்பாங்க.

13) இவங்க கிட்ட தப்பிச்ச பிறகு அடுத்த அறைல டி.வி பாருங்க.B கவுன்டர்ல உங்கள கூப்பிட்டதும் போங்க.அவங்கதான் மத்திய அரசோட சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்.அவங்களும் உங்க விண்ணப்பம்,சான்றிதழ் எல்லாம் சரிபார்த்துட்டு கையெழுத்து போடுவாங்க.

14) அடுத்து இதே மாதிரி C கவுன்டர் அவர் தான் பெரிய ஆபீசர்-பாஸ்போர்ட் குடுகறவரு அவரும் எல்லாம் பாத்துட்டு பொன்னான கையெழுத்த போட்டு குடுப்பாரு.

15) பிரதிகளையும்,ஆபீசர்கள் கையெழுத்து போட்ட கோப்பயும் கடைசி கவுன்டர்ல குடுத்தீங்கன்னா அந்த புள்ள எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு கடுதாசி குடுக்கும் அத பத்திரமா எடுத்துகிட்டு ஊருக்கு கிளம்பி போங்க.

16) 15 நாள் கழிச்சு உங்களுக்கு காவல் நிலையத்துல இருந்து அழைப்பு வரும்.அங்க போய் சுத்துபட்டு 18 பட்டில உத்தமபுத்திரன் நாந்தானுங்கனு சொல்லிட்டு அப்படியே முகவரிக்கான சான்றையும் காமிச்சுட்டு வந்திருங்க.

17) இன்னொரு 15 நாள் கழிச்சு உங்க வீடு தேடி பாஸ்போர்ட் தபால்ல வரும்.உங்க கைல மட்டும்தான் குடுப்பாங்க அதனால நீங்க எங்காவது கொலை கிலை பண்ணிட்டு தலைமறைவா இருந்தா நேரடியா தபால் அலுவலகத்துல போய் வாங்கிக்கங்க.

என்னடா 3 நாள்னு சொல்லிட்டு மாசக்கணக்குல இழுக்கறானேன்னு பாக்கறீங்களா.விண்ணப்பிக்க ஒரு நாளு,நேர்முகத் தேர்வுக்கு ஒரு நாளு, காவல் நிலையத்துல ஒரு நாளு ஆக மொத்தம் மூணு நாளு எப்புடீ....
திட்டறதுன்னா தாராளமா கீழ திட்டிட்டு போங்க...

36 comments:

  1. ஆக மொத்தம் பாஸ்போர்ட் வாங்றதுக்குள்ள தாவு திர்ந்து போகும் அப்படிதானே. ஹ ஹா ஹா ஹா

    செய்யது

    ReplyDelete
    Replies
    1. ஃபாரின் பீச்ல குஜாலா குளிக்கனும்னா இதெல்லாம் தாங்கி தான் ஆகணும் நண்பா...

      Delete
  2. பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள்..நன்றி...ஆனால் ஒரு சந்தேகம்..நீங்களும் அந்த பொண்ணுககிட்ட கடலைபோட்ட மாதிரி தெரிதே...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க... ஆமாங்க... தேவையில்லாம அந்த புள்ளகிட்ட கல்லூரி விடுதில இருந்த கதையெல்லாம் சொல்லி இப்ப அதனால தஞ்சாவூர் போக வேண்டிய நிலைமை...

      Delete
    2. பயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி
      pls watch www.sscharitable.in

      Delete
    3. பயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி
      pls watch www.sscharitable.in

      Delete
  3. நல்ல வழிகாட்டல் சுந்தரபாண்டியன். இப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன. இனி தொடர்வேன். Please remove the word verification. It disturbs to enter views. thank u.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா... word verification நீக்கப்பட்டு விட்டது ஐயா... சிரமத்துக்கு மன்னிக்கவும்...

      Delete
  4. எலேய் மாப்ள..கலாய்ச்சி புட்டியே!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நம்மால முடிஞ்சதுங் மாமா...

      Delete
  5. nice

    http://www.ambuli3d.blogspot.com/

    ReplyDelete
  6. பலருக்கும் உதவக்கூடிய இடுகை நண்பரே.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் பகிர்வு நண்பா... நானும் ட்ரை பண்ணணும்... (கலகலன்னு எழுதியிருக்கீங்க..)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பாலாசி...

      Delete
  8. பயனுள்ள தகவல்கள்..


    ஆனாலும் ஒரு இந்தியக் குடிமகனுக்கான சான்று வழங்கும் நடவடிக்கைகள், தீவிரவாதிகளை விசாரித்து தரப்படுவதுபோலுள்ளது வருத்தமாக உள்ளது.

    இந்த கோடு போடப்பட்ட நடைமுறைகளின் கீழ் நம் நாட்டின் கடைக்கோடி விவசாயி, கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாங்க இயலுமா என்பது மிக ஆச்சர்யமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கடினமான நடைமுறைகள் தானுங்க.மற்றவர் துணையின்றி படிப்பறிவு குறைந்த மக்கள் வாங்குவது குதிரை கொம்பு தானுங்க.

      Delete
  9. நன்று

    ReplyDelete
  10. நன்றி நண்பா.பொன்னுங்க அழக இருக்குனு சொன்னீங்களே உண்மையவா?

    ReplyDelete
  11. ரொம்ப அருமையான தகவல்

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம் நான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி கிட்டதட்ட 50நாட்கள் ஆகியும் இன்னும் எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை சார் போலீஸ் விசாரணை 10 நட்களில் முடிந்தது அனாலும் இன்னும் வரவில்லை

      Delete
  12. பயபுள்ள ஏன்னா மாதரி ஐடியா சொல்லிருகிங்க

    ReplyDelete
  13. ரொம்ப சிரமம் தான்

    ReplyDelete
  14. சார் வணக்கம் நான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி கிட்டதட்ட 50நாட்கள் ஆகியும் இன்னும் எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை சார் போலீஸ் விசாரணை 10 நட்களில் முடிந்தது அனாலும் இன்னும் வரவில்லை

    ReplyDelete
  15. நீங்கல்லாம் நல்ல வரனும்க நல்லா வரணும்

    ReplyDelete
  16. Dear bro,
    for married woman should attached marriage certificate.please explain .thanx

    mohamed

    ReplyDelete
  17. Super Nanba.. Best Guidance to Apply Passport
    Thank U

    ReplyDelete
  18. பயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி
    pls see www.sscharitable.in

    ReplyDelete