Wednesday, 21 December 2011

ஈழத்தமிழருக்கு இந்தியாவின் மற்றுமொரு துரோகம்


சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம் !
21 December, 2011 by admin
இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்வதோடு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல இந்தியா தானும் தமிழர்களைப் பலிகடாவாக்கி உதவிவருகின்றது. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்றும் தற்போது நடந்துள்ளது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் இவர்கள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கமரா மற்றும் பதிவுசெய்யும் கருவிகளோடு சென்ற இவர்களை நம்பி பல இலங்கைத் தமிழர்கள் தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இவர்களைப் பரிபூரணமாக நம்பியும் உள்ளனர்.

இதனால் தமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்கள் பற்றி பல பொதுமக்களும் அதிகாரிகளும் இவர்களுக்கு கூறியுள்ளனர். இதற்கு ஒரு படி மேலே போய் சில போராளிகளும் விடுதலைப் புலிகளின் முது நிலைத் தளபதிகள் சிலரும் தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்து இவர்களுக்கு தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் மறுகணமே அவர்களைப் பின் தொடர்ந்த ரோ அதிகாரிகள் அவர்களில் பலரை இரகசியமாகக் கைதுசெய்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்தவேளை மனித நேய அமைப்புகளில் வேலைசெய்தோர் ரெட் கிராஸ் அமைப்பில் வேலைசெய்தோர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனப் பலர் தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்த உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசானது இலங்கையைக் காப்பாற்ற முனைவதும் மற்றும் போர்குற்ற சாட்சிகளைப் பிடித்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக எவ்வளவு இழிவான செயலை இந்திய மத்திய அரசு செய்யமுடியுமோ அவ்வளவு இழிவான செயல்களை அது செய்துவருகிறது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் சிலரும் உதவுகிறார்கள் என்பதே பெரும் வெட்க்கக்கேடான விடையமாக உள்ளது. இவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து இத் திட்டத்திற்காக இந்தியா சென்ற நபர்களது புகைப்படங்களை பெறும் முயற்ச்சியில் அதிர்வு இணையம் ஈடுபட்டுள்ளது. புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை ஆதாரத்தோடு வெளியிடப்படும்.

                                                                                 நன்றி-அதிர்வு.காம்

இச்செய்தியை அதிர்வு இனையதளத்தில் காண கீழே சொடுக்கவும்...

2 comments:

  1. கூட்டிக் கொடுக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனம் சாயம் வெளுத்த பின்னும், அவர்களை ஆளவிட்டு அடிமையாய் கிடக்கும் வேடிக்கை மனிதர்கள் நாம்.

    ReplyDelete
  2. தமிழ் தேசியத்திற்கான விதைகளை மத்திய அரசே விதைத்துக் கொண்டிருக்கிறது.கேரளாவும் தன் பங்குக்கு கடமையாற்றுகிறது.நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக தமிழ் தேசியம் வலுப்பெற்று வருகிறது தோழரே...

    ReplyDelete