Wednesday, 28 December 2011

2011 ஆம் ஆண்டு அரசியல் விருதுகள்

2011 ஆம் ஆண்டு காலண்டர தூக்கி போட்டுட்டு 2012 காலண்டர மாட்ட போற உன்னதமான செயலுக்கு வழி வகுக்கும் புத்தாண்டு வேளையிலே இந்த ஆண்டுக்கான அரசியல் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

”வந்தாச்சு வந்தாச்சு விருது” 


கடல்லயே கிடைக்காத ஜாமீனை கோர்ட்டில் வாங்கி திராவிட இனத்தின் போர்வாளாக எண்ணிய கம்பிகளை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்து ஐ.சி.யூ வில் இருந்த தி.மு.க விற்கு புது இரத்தம் பாய்ச்சிய கனி அக்காவுக்கு “வந்தாச்சு வந்தாச்சு விருது”.கனி: ”ஜாமீனில் வெளில வந்ததுக்காகவே ஊரெல்லாம் ஃபிளக்ஸ் கட்டி,மோளம் அடிச்சு,கூட்டத்த கூட்டி அகில இந்திய அளவில் அசிங்கப்பட்ட தி.மு.க வினருக்கு இந்த விருது சமர்ப்பனம் செய்கிறேன்”

”சிறந்த ’அப்பா’டக்கர் விருது” 


கூடங்குளத்துல குண்டு வெடிச்சாலும்,முல்லைப் பெரியாறு நாசமா போனாலும்,கட்சிக்காரன் எத்தன பேர் ஜெயிலுக்கு போனாலும் கண்டுக்காம கனிக்கு ஜாமீன் கிடைக்கறது தான் முக்கியம்னு தினமும் டி.வி ஃபிளாஷ் நியூஸ் பார்த்துக் கொண்டே காலத்தை கழித்த தமிழினத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு ”சிறந்த ’அப்பா’டக்கர் விருது”


கரு: “இந்த விருது பெற்றமைக்காக ’அப்பாடக்கரான அன்புத் தலைவன்’ என ஒரு பாராட்டு விழா தம்பி ரஜினி,கமல் தலைமையில் ஜெகத்ரட்சகன் நடத்த இருப்பது கேட்டு பேருவகை கொள்கிறேன்”

ஜெகத்: ”தலைவா ஆட்சி போயி ஆறு மாசம் ஆச்சு.”
”தாத்தா பிஸ்கோத்து விருது”


முதல் இன்னிங்சுல வெறித்தனமா ஆடிட்டு இரண்டாவது இன்னிங்சுல மொக்கை அடி வாங்குற இந்திய கிரிக்கெட் அணி மாதிரி.ஊர் முழுக்க கூடி உண்ணாவிரதம் இருந்து அடுத்த காந்தினு பேர் வாங்கி “சரத்பவாருக்கு ஒரு அடிதான் விழுந்துச்சா?”னு கேட்டு தான் டெரர் காந்தினு நிரூபிச்சு இப்ப உண்ணாவிரதம் இருந்து உடனே வாபஸ் வாங்கி. இப்படி பல ட்விஸ்டுகள குடுத்து பிஸ்கோத்தாகிப் போனா ஹசாரே தாத்தாவுக்கு “தாத்தா பிஸ்கோத்து விருது”


ஹசாரே: ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”

”இது வாயா? கால்வாயா? விருது”


’காங்கிரச எதுத்து யார் பேசினாலும் அவங்க நாசமா போயிடுவாங்க,புள்ள குட்டி எல்லாம் நாசமா போயிடும்,ரத்த வாந்தி எடுத்து சாவாங்க’ என ஒவ்வொரு பேட்டியிலும் காங்கிரசை எதிர்க்குறவங்கல சாமகோடங்கி ரேஞ்சுக்கு சாவடிக்கும் திக்விஜய் சிங்கிற்கு “இது வாயா? கால்வாயா? விருது”


திக்விஜய்: இந்த ப்ளாக் எழுதறவருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும் சம்பந்தம் இருக்கு. இவருக்கு நாட்டுபற்று இல்ல.

நான்: அததாண்டா நானும் சொல்றேன் எனக்கு நாட்டுப்பற்று இல்ல.

“பல்பு வாங்கலியோ பல்பு விருது”

எந்த ஸ்டேட்டுல எலக்‌ஷன் நடந்தாலும் உடனே போயி ஆஜராகி அங்க உள்ள ஏழை பாழைங்க வீட்டுல இருக்குற சோத்தையெல்லாம் புடுங்கி தின்னு,ஊர் கிணத்துல கலீஜ் பண்ணி,ஹெலிகாப்டர்ல போய் இறங்கி விவசாயம் பண்ணி எதிர்கட்சிக்காரங்கள நாராசமா திட்டிட்டு திரும்பி வரப்ப மறக்காம பல்பு வாங்கிட்டு வர்ற ராகுல் காந்திக்கு “பல்பு வாங்கலியோ பல்பு விருது” 


ராகுல்: “மாயாவதி எல்லா கசையும் பிக்பாக்கட் அடிச்சுட்டார் எங்க கைல ஆட்சிய குடுங்க உங்க பணத்தையெல்லாம் இத்தாலி பேங்குல பத்திரமா போட்டு வெக்கறோம்”

கபில் சிபல்: “ராகுலுக்கு பிரதமராகும் முழுதகுதி வந்திவிட்டது”
பிரணாப்: “வெளிநாட்டு வங்கிகளில் வட்டி அதிகம் என்பதால் ராகுலின் இந்த முடிவு பொருளாதார மறுமலர்ச்சியை உண்டு பண்ணும்”
நிருபர்: “யாருக்கு?”
பிரணாப்: “யாருக்கோ.....”

“வாயில புண்ணு விருது”

எத்தன வருசம் ஆனாலும் சரி பல்லு விளக்கறக்கும்,பக்கோடா திங்கறக்கும் மட்டுமே வாய திறக்கும் மன்மோகன் சிங்குக்கு ”வாயில புண்ணு விருது”


மன்மோகன்: “................................................................”

நிருபர்:”எதிர்பார்க்காதீங்க”

”ஆத்தா முறைச்சு பாத்தா விருது”


”ஜெயிப்பாங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ பெரிசா ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கலபா” என சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்கட்சிகளுக்கு ரிவிட் அடித்தவர் இவர். ஒரு கட்சிக்கு பக்கத்து மாநிலத்துல கிளை ஆரம்பிக்கலாம் தேசிய அளவுல கிளைகள் ஆரம்பிக்கலாம் ஏன் ஃபாரின் ல கூட ஆரம்பிக்கலாம் ஆனா வரலாற்றில் முதல் முறையா தி.மு.க வுக்கு ஜெயிலில் கிளை ஆரம்பிக்க வெச்சவர் இவர்.கட்சத்தீவு,ஈழம்,3 பேரின் தூக்கு தண்டனை என எல்லா விசயத்துலயும் மத்திய அரசை புரட்டி போட்டு கும்மியடித்தவர் இவர். ”விரோதிய கூட மன்னிச்சுடுவேன் ஆனா கூடவே இருந்து குழி பறிக்கறவன மன்னிக்கவே மாட்டேன்” என இத்தன நாளா ஒன்னுமன்னா ஆட்டய போட்ட தோழிய விரட்டி விட்ட நம் முதல்வர் அம்மா அவர்களுக்கு “ஆத்தா முறைச்சு பாத்தா விருது”ஜெ:  “அண்ணா நாமம் வாழ்க,புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களுக்கு போட்ட நாமம் வாழ்க”


இவ்வளவு நேரம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

8 comments:

 1. கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்துள்ளேன். கவர்ந்த எழுத்து நடை.

  ReplyDelete
 2. ஐயா,

  செத்(த)தாண்டு விருதுகள் எல்லாம் சிறப்பா தான் இருக்கு.

  ReplyDelete
 3. வேறு ஒருவர் செய்த பாதையை பின் பற்றி அமைந்துள்ளது. ஆனாலும் நல்லாவே உள்லது

  ReplyDelete
 4. நன்றி நண்பரே... அந்த மற்றொரு தொடுப்பை அளித்தீர்களென்றால் படித்து சற்று சுயபரிசோதனை செய்து கொள்வேன்.ஒரு சிறிய உதவியாக நினைத்து செய்யவும்.மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நித்தியை தேடினேன் காணோம்

  கடல்லயே இல்லியாம்

  ReplyDelete
 6. சிறப்பான புத்தாண்டு விருதுகள் பெற்றவர்களுக்குப் பாராட்டுக்கள் !

  ReplyDelete